sarath
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெடுக்குநாறி விவகாரம்! – நீதிமன்றம் செல்கிறார் வீரசேகர

Share

வெடுக்குநாறி விவகாரம்! – நீதிமன்றம் செல்கிறார் வீரசேகர

வவுனியா – வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளனர்.மலையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அவர் மலையில் சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, ஆலயத்தில் இந்து சமயப்பேரவையின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையால் ஆலய நிர்வாகத்தினரும் அங்கு கூடியிருந்தனர்.

இதன்போது பிரதான காட்டுப் பாதையூடாக ஆலயத்துக்கு வருகை தருவோர் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உள்வர வேண்டாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக ஆலய வளாகத்தில் போடப்பட்ட தற்காலிக கொட்டகையையும் உடன் அகற்றுமாறும் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...