தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பல சட்டங்கள் குடிமக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மீறுவதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிய தீர்மானித்தன.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பகீர் மார்க்கர், சந்திம வீரக்கொடி, கலாநிதி நாலக கொடஹேவா, உதய கம்மன்பில, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, வீரசுமண வீரசிங்க, கஜேந்திர பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, கெவிது குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
#SriLankaNews
1 Comment