download 1 19
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நூல் அறிமுக நிகழ்வில் அவமரியாதை!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசன் குறித்த நூல் அறிமுக நிகழ்வில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அவமரியாதை செய்து ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றிய சம்பவமொன்று இடம்பெற்றது.

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வின்

ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள்  சென்றிருந்தனர்.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்ற நேரத்தில் அங்கு நின்ற ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் நீங்கள் ஊடகவியலாளர்களா, காணொளி எடுக்க வேண்டாம் நிகழ்வு மண்டபத்தை விட்டு  வெளியேறுங்கள் என ஊடகவியலாளரிடம் கடும் தொனியில் ரகளையில் ஈடுபட்டார். இதன்போது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஏனையவர்களும் மெளனமாக இருந்தனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் நிகழ்வு மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு ஏற்பாட்டாளர்களே நிகழ்வில் அவமரியாதை செய்தமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...