IMG 20230422 WA0085 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவில் பதற்றம்!!

Share

நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு ஊர்காவற்துறை நீதவான் விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டார்,

ஊர்காவற் துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார்

கடற்படையின் விசேட படகின் மூலம் ஊர்காவற்துறை நீதவான் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட பொலிஸ் அணிகள்நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நெடுந்தீவுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

IMG 20230422 WA0069

இதேவேளை, படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு உடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இன்று அதிகாலை நெடுந்தீவில் கடற்கரை முகாமிற்கு அண்மையில் வீட்டில் தங்கி இருந்த ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG 20230422 WA0091

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...