20230401 125915 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல் – யாழில் கண்காட்சி

Share

யாழ்.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளிலான கண்காட்சி நடத்தப்பட்டிருக்கின்றது.

குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலை வகைகள் மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான குறித்த கண்காட்சியினை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தின.

இக் கண்காட்சியில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கை மேம்படுத்துவதற்காக போஷாக்கு உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு

பாரம்பரியமான உணவு தயாரித்து வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கினை மேம்படுத்துவதற்கு உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாாி, அதிகாரி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாாி, அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதார பரிசோகர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...