amnesty
இலங்கைசெய்திகள்

IMF பிரதிநிதிகள் – சர்வதேச மன்னிப்பு சபை சந்திப்பு

Share

சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் இன்று (30) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்தார்.

இது குறித்து ஆங்கில ஊடகமொன்று கருத்து தெரிவித்த அவர்,

உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அதேவேளையில் இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நன்கு புரிந்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த காலங்களில் கவலைகளை எழுப்பியிருந்தது.

சர்வதேச மன்னிப்புச் சபையானது, இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளில் பொருளாதார, சமூக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கும் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

“எந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் சமூக செலவினங்களில் குறைப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்று மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து கடன் வழங்குபவர்களும் மனித உரிமைகள் கடமைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன் முழு செயல்முறையும் வெளிப்படையாகவும் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...