car
இலங்கைசெய்திகள்

மின்சார கார்கள் இறக்குமதி!!

Share

எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அமைச்சரவை புதிய வழியில் சிந்திக்கும் அமைச்சரவை ஆகும்.

இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. சில அமைச்சர்கள் இதற்கு அதிசொகுசு கார்களை சேர்க்கவும் மற்றும் பெட்ரோல் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறும் முன்மொழிந்தனர். எதிர்காலத்தில் நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும் என அரசாங்கத்தின் தீர்மானம் ஒன்று உள்ளது.

நாம் மின்சார வாகனங்களுக்கு செல்ல வேண்டும். அதனால்தான் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில், இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில், முடிந்தவரை மின்சார வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளோம்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்கள் என்ற தீர்மானம் முன்னதாகவே எடுக்கப்பட்டுள்ளது. – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...