law
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபா குழந்தை படுகொலை – 25 வருடங்களின் பின் மரண தண்டனை!!

Share

பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டமையால் 25 வருடங்களுக்குi பின்னர் அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர்நாயகம் பிரபாகரனிள் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கும் இன்று (29) புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த 1997 ம் ஆண்டு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த (ஈரோஸ்) கட்சி காரியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்சி ஆதரவாளர் ஒருவருமாக இருவருக்கும் கட்சி செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த (1997-7-17) ம் திகதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளரும் இணைந்து காரியாலயத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர் மீதும் அவரது குடும்பத்தினர் கட்சி ஆதரவாளர் மீதும் குண்டுத் தாக்குதல் மற்றும் வாளால் வெட்டியும் தாக்குதலை நடாத்தினர்.

இதில் கட்சி செயலாளரின் 3 வயது பிள்ளையான கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன் பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் யோகநாதன் ஒரு கையும் புவிராஜசிங்கம் இரு கைகளையும் இழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சமீல ரஜீந்தர, கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தி ஆகிய இருவரையும் கைதுசெய்து பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று (29) மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது அரச சார்பில் அரச சட்டத்தரணி கலாநிதி அரச சட்டத்தரணி ஷெஹான் முஸ்தபாவும். எதிரிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணியின் ஆலோசனைக்கிணங்க சட்டத்தரணிகள் ஆஜராகி வாதாடினர்.

இதனையடுத்து நீதிபதி குறித்த இருவரும் மனித படுகொலை மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவருக்கு 3 இருந்து 5 வரையான குற்றச்சாட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 6 குற்றச்சாட்டிற்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியசிறத் தண்டனையும் முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...