download 9
இலங்கைசெய்திகள்

கேக்குகளை வாங்க வேண்டாம்!!

Share

புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கேக்குகளை வாங்க வேண்டாம் என அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து பெறப்பட்ட முட்டைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கொழும்பு துறைமுகத்திலுள்ள முட்டைகள் 7 நாட்களாக அங்கேயே இருக்கிறது. இந்த திரவ முட்டைகள் மிக வேகமாக அழுகக் கூடியவை. மேலும் அவற்றை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுவது அமைச்சரின் பொறுப்பாகும்.

குறித்த முட்டைகளை உபயோகித்து புத்தாண்டுக்கு கேக்குகளைத் தயாரிக்க வேண்டாம் என வெதுப்பக உரிமையாளர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். வெதுப்பக உரிமையாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உபயோகித்தால் கேக்குகளை வாங்குவதைப் புறக்கணிப்போம்.

துறைமுகம் மற்றும் சுங்கம், முட்டைகளை சேமித்து வைத்து இறக்குமதி ஏற்றுமதி விதிமுறைகளை மீறியுள்ளது. எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் நிலைப்பாடு பற்றி ஆராய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என ஊடக சந்திப்பொன்றில்  அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...