boat 2
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு வராதீர்!!

Share

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வோரை அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

படகு மூலம் செல்வதன் ஆபத்தையும் பொருட்படுத்தாது சிலர் குடிபெயர முயல்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கிறது.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கடத்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக  இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் எவருக்கும் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான வாய்ப்பு இல்லையென தெரிவிக்கும் வலுவான பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு சட்டவிரோதமான படகும் அவுஸ்திரேலியாவை வெற்றிகரமாக வந்தடையவில்லை. சட்டவிரோதமாக உள்நுழைய நினைத்த எவரையும் அவுஸ்திரேலிய அரசு ஏற்கவில்லையென இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற எத்தனிப்பவர்களுக்கான ஓர் அமைப்பு உள்ளது, அத்தகைய விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தால் மதிப்பிடப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஸ்டீபன் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...