22 6304c60b64cab
அரசியல்இலங்கைசெய்திகள்

வசந்த முதலிகே விடுதலை – நீதிமன்றத்தின் உத்தரவு

Share

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் சமர்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிப்பதற்கான தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, குறித்த மேன்முறையீட்டில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவை போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியும் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...