202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் கைது!

Share

களனி பகுதியில் நேற்றிரவு (08) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன திஸாநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன், நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இன்றைய தினம் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...