cell
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

தனிநபர் ரகசியங்கள் பதிவாகும்! – செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி அதிர்ச்சி

Share

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும்.

செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை.

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது.

அதுமட்டுமின்றி தகவல் தொடர்பு என்ற எல்லையை தாண்டி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் கலை களஞ்சியமாகவும் மாறிவிட்டது. தொலைதொடர்புக்காக மட்டுமே தொடங்கப்பட்ட செல்போன் இன்று உலக தகவல்களையும் அறிந்து கொள்ளும் சாதனமாக மாறிபோனது. அதோடு செல்போன் மூலம் பல தீய செயல்களும் நடக்கிறது.

ஆபாச படங்களை பிறருக்கு தெரியாமல் பதிவு செய்வது, உரையாடல்களை பதிவு செய்வது, அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது போன்றவையும் நடக்கிறது. செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு இப்போது 94 வயதாகிறது.

செல்போனின் இப்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, செல்போனின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் – என்றார்.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...