1675062227 1675046372 STF Arrested L
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது

Share

“டிஸ்கோ” என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரான்சில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ரூபன்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று (29) கொழும்பு 15, டெம்பிள் வீதி, மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...