சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியத் தூதுவருடன் சந்திப்பு
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தை புறக்கணிக்க கூட்டமைப்பு முடிவு!

Share

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன்,

“சுதந்திரம் கிடைத்த உடனேயே அது ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மைவாதமாக மாற்றப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்தனர்.

எனினும், தங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அவர்களும் கருதுகின்றனர். எனவேதான் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாடும் போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அதனால்தான் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாம் இதனை கருப்பு தினமாக அறிவித்து, நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான பிரச்சாரத்தைத் ஆரம்பிக்கவுள்ளோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...