202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையர்கள் உட்பட 27 பேர் வெளிநாட்டில் கைது!

Share

இலங்கை, பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனத்துக்குள் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ருமேனியாவின் நட்லாக் எல்லையில் கனரக வாகனமொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது. அதில், சரக்கு கொள்கலனின் முன் பகுதியில் இருந்த ஒரு சிறப்பு பெட்டியில், மறைந்திருந்த 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக அராட் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

இதேவேளை, பொலிஸாரால் உலோகக் கம்பிகள் ஏற்பட்ட மற்றுமொரு கனரக வாகனம் சோதனையிடப்பட்டது. அதன்போது, அதில் மறைந்திருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 – 42 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...