sanakian 2
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்த்தவர் ரணில்!

Share

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார்.

ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா தமிழ் மக்களின் அரசியர் தீர்வுக்கு ஆதரவு வழங்ககும் என்றதை வரவேற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூச்சு என்னும் தொனிப் பொருளில் நேற்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும் போது எதிர்கட்சி தலைவர்கள் எதிர்த்து தடையாக இருந்தனர். இருந்தபோதும் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா உடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அவர் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கவேண்டும் தீர்கப்படவேண்டிய விடையம் அதற்கு அவரது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த அரசாங்கத்தின் ஊடாக இந்த காலப்பகுதியிலே வருமா? இல்லையா? என்பது இரண்டாவது விடையம் ஆனால் அவ்வாறு வருவதற்கு சந்தர்பம் இருந்தால் எதிர்வரும் காலங்களில் பூரணமான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொனராகலை, பதுளை மாவட்டங்களில் இருதய சத்திர சிகிச்சைக்கு ஒரு இடமும் இல்லை அந்த மக்கள் யாழப்பாணம் சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் இருதய நோயால் செத்தால் பறவாய் இல்லை நாங்கள் இனவாதிகள் என்று செயற்பட்ட இந்த மொட்டு அரசாங்கம் இனவாத அரசாங்கம் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமில்லை. எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் தலைவராக வரப்போகும் எதிர்கட்சி தலைவரே முதலாவது வேலையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதய சத்திரசிகிசை வழங்கவேண்டும் என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...