வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர்
இலங்கைசெய்திகள்

தலிபான்களை பின்பற்றும் பிக்கு மாணவர்கள்!!

Share

பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாகவும் இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் மிஹிந்தல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

புத்தரின் தர்ம சிந்தனைகளைப் பின்பற்றாமல் தலிபான்கள் லெனின் கோட்பாட்டை பின்பற்றுவதுபோல இவர்கள் பின்பற்றுகின்றனர் – என்றார்.

விசேட மற்றும் பொது பட்டம் பெறும் இரு வகையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதாகவும் அவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்  என்றும் சுட்டிக்காட்டினார்.

இதே சட்டத்தை பிக்கு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், சஹரான் என்ற நபர் தாடியுடன் இறந்ததாகவும் அதன் பின்னர் பலர் சஹாரானைப் போல  தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் மற்றும் பௌத்த துறவிகள், தலைமுடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் .பௌத்த பாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பயிலும் கலைப் பீட பிக்கு மாணவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகின்றனர் என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...