Connect with us

அரசியல்

மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகள்!!

Published

on

ananda shankari

“வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிச் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது,

“அண்மையில் சர்வகட்சி மாநாட்டை கூட்டிய ஜனாதிபதி, கட்சி தலைவர்கள் இல்லாதவர்களை அழைத்துள்ள போதும் என்னை அழைக்கவில்லை. ஏன் என்றால் சங்கரி வந்தால் பிரச்சனை என்று ரணிலுக்கு தெரியும்.

கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் சமஷ்டியை தீர்வாக வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான 22 எம்.பிக்கள் தேர்தலை பகிஷ்கரியுங்கள் என பிரச்சாரம் செய்து ரணிலின் சமஷ்டியை தோக்கடித்து மஹிந்தவின் ஓற்றையாட்சியை வெல்லவைத்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தனர்.

எனவே அன்று சமஷ்டி வேண்டாம் என பிரச்சாரம் செய்த இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் தலைமைகள், தற்போது வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் இடிப்பு, காணி அபகரிப்பில் ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுக்கு பேச்சுக்கு வருமாறு அழைக்கின்றபோது, முதலில் தமிழர்களின் காணி அபகரிப்பு, இந்து ஆலயங்கள் உடைப்பை நிறுத்தினால் தான் பேச்சுக்கு நாங்கள் வருவோம் என சொல்ல தைரியம் இல்லாதவர்கள்.

2009ஆம் இறுதி யுத்தத்தின் போது 3 இலட்சம் மக்கள் இறக்கும் போது மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, இன்று அரசாங்கத்துடன் வெட்கமில்லாமல் சமஷ்டியை பற்றி பேசப்போகிறனர் என்பது வேடிக்கையானது என்பதுடன் இப்படியான சூழ்நிலையில் இனி சமஷ்டி கிடைக்குமா? மக்களை ஏமாற்றினால் போதும் எனது அரசியல் செய்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியால், பட்டினியால் மக்கள் சாகின்றனர். இவ்வாறு எரிகின்ற பிரச்சனையை எரியவிட்டுக் கொண்டு இருக்கின்றனர். தனது இப்போதைய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல என்று ரணிலுக்கு நன்றாக தெரியும். இந்த தலைவர்களின் ஊழலை பற்றி அம்பலப்படுத்தாது விடுவதால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இரா.சம்மந்தன் பாராளுமன்ற படி ஏற தகுதியில்லாதவர். ஏன் என்றால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் அல்ல.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்துவம் செய்ய 3 வெளிநாடுகளை கூப்பிட்ட வேண்டும் என அறிக்கை விட்ட அடி முட்டாள்கள். எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள். செய்தது போதும். எந்த நாடும், இதை செய் என்று சொல்லமுடியாது என்பது சட்டத்தரணிகளான உங்களுக்கு தெரியாதா? ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் வந்ததும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று அங்கு அருகில் நிற்கின்றனர்.

என்னவென்றால் நாங்கள் சொல்லிதான் இந்தியா பொருட்களுடன் வந்தது என சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட தமிழ் தலைமைகள் தமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கவேண்டும். அப்போது தான் தாங்கள் சொந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஏமாற்றி துரோகம் செய்துள்ளது என தெரியும். இல்லை என்று ஒருவர் சொல்லட்டும் நான் பகிரங்கமாக மேடைக்கு வர தயார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி 1, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை...