image 3c0225be6d
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விருந்தில் போதைப்பொருள்! – 30 பேர் கைது

Share

தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் இந்த தனியார் விருந்து சனிக்கிழமை (17) அன்று நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ​தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த  பெந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...