vijaya
இலங்கைசெய்திகள்

ஆங்கில மொழி வர்த்தமானி ரத்து!

Share

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் சபையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தான் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும் முன்னர் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியை பாராளுமன்றத்தின் ஊடாக ரத்துச்செய்ய முடியும் என்றும் அதற்கிணங்க, வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில் அடுத்த வாரம் யோசனை ஒன்றை முவைக்கவுள்ளதாகக் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைக்கு இணங்கவே இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...