2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதை தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கான சீருடை தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment