வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment