சினிமாபொழுதுபோக்கு

‘ரஞ்சிதமே ரஞ்சிதமே….’ சமூக வலைத்தளங்களை அதிரவைக்கும் பாடல் வீடியோ

Share

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கலர்ஃபுல் காஸ்ட்யூம் அணிந்து, பிரம்மாண்டமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய செட்டில் படமாக்கப்பட்ட இந்த பாடல் வீடியோ செம ரிச்சாக உள்ளது.

விஜய் மற்றும் எம்எம் மானசி குரலில் உருவாகிய இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறை இந்த பாடலை கேட்கும்போதே பாடல் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் இந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘வாரிசு’ திரைப்படம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hqdefault

ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனசை கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே

கட்டுமல்லி கட்டிவச்சா
வட்ட கருப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சாரப்பாம்பு இடுப்ப வச்சா

நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடி நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாத்துண்டு வெட்கம் வச்சா

நெத்தி பொட்டில் என்னை தூக்கி
பொட்டு போல வச்சவளே
சுத்துப்பட்டு ஊர பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

தெத்து பல்லு ஓரத்தில
உச்சி கொட்டும் நேரத்துல

பட்டுன்னு பத்தியே
உச்சகட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனசை கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்...

124750333
பொழுதுபோக்குசினிமா

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ திரைப்படம்: 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் சாதனை!

‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் மாரி...

MixCollage 22 Oct 2025 09 19 AM 8391
பொழுதுபோக்குசினிமா

ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து...

ilaiyaraaja dude
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’ திரைப்படத்திற்கு இளையராஜா தரப்பில் எதிர்ப்பு

இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜாவின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தக்...