ezgif 2 8fcce45880 e1667326307207
சினிமாபொழுதுபோக்கு

மாஸ் காட்டும் பிரபுதேவா – அனிருத் – பிரசாந்த் கூட்டணி

Share

பிரபல நடிகரின் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை பிரபுதேவா மாஸ்டர் நடன இயக்கம் செய்வதாகவும், அனிருத் இந்த பாடலை பாடி உள்ளதாகவும், இந்த பாடலில் 50க்கும் மேற்பட்ட டான்ஸர்கள் நடனமாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் அஜித், விஜய்க்கு இணையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்தவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்துள்ள ’அந்தகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘டோரா புஜ்ஜி’ என்ற பாடல் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய, அனிருத் பாடியுள்ளார். பிரபு தேவா நடன இயக்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன் பிரசாந்த் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த பாடலின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதேபோல் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியாகராஜ இயக்கியுள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ezgif 2 8fcce45880 1

#Cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 5
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது என கசிந்த தகவல்

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து...

1 5
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி.

நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தில் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். இந்த இடத்தில் இருந்து விலக யாரும்...

4 4
சினிமாபொழுதுபோக்கு

இருபதுகளில் தொலைத்த இன்பம், குடும்ப நேரம்.. சமந்தா பதிவால் ரசிகர்கள் ஷாக்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...

2 4
சினிமாபொழுதுபோக்கு

ஒவ்வொன்னும் தனி ரகம்ல.. BB9 உறுதியான இறுதி போட்டியாளர்கள் இவங்க தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும்...