loan to fulfill financial need
இலங்கைசெய்திகள்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்

Share

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டங்கள் குறித்த விசேட அறிவிப்பை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் தொடர்பான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆதரவை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் திட்டத்தின் மூலம் செயல்பாட்டு மூலதனக் கடன்களைப் பெற முடியும் என்பதுடன் ஒரு நிறுவனத்தால் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 மில்லியன் ரூபாவாகும்.

ஆறு (06) மாதங்கள் அதிகபட்ச கடன் சலுகைக் காலத்துடன் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் கடன் தொகையை செலுத்தலாம்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...