202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோப்பாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Share

கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், பொலிசாரினால் 24 மணிநேர விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் கோப்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் ஆனந்தபுரப் பகுதியில் 25 வயதுடைய இளைஞன் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த போதைப்பொருளை பாவித்து வருவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாது உள்ளதாகவும் ஆனந்தபுரப் பகுதியிலேயே தான் போதைப்பொருளை காசு கொடுத்து பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...