image 61b45a4f44 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொடர் மழை! – மலையகத்துக்கு எச்சரிக்கை

Share

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.மேலும் பணி புகை மூட்டம் காரணமாக பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்த சாரதிகள் அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பாரிய மண்மேடுகள், மற்றும் ஆற்று ஓரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணியகம் எச்சரிக்கை விடுத்திருப்பது பணியகத்தின் கள பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மண்சரிவுகள் அபாயம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் பிரதேச மக்கள் அவ்வப்பகுதி கிராம சேவகர்களின் கவனத்திற்கு அறிவிக்குமாறும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...