4545
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்!

Share

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருள் பொருள் பாவனையானது இலங்கையை மிகவும் பாதித்து வருகிறது. குறிப்பாக வடமாகாண இளைஞர் யுவதிகள் மத்தியில் ஐஸ்,கஞ்சா போன்ற உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.

நம்முடைய அதிகாரிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து “போதைவஸ்து” பாவனைக்கு எதிராக போராடிவருகின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகவும், அத்துடன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் வலியுறுத்துகிறது.

மிகவேகமாக அதிகரித்துவரும் போதைவஸ்துக்கு எதிராக அனைவரும் விழிப்புணர்வு பெற்று வருவதால் “காவல் துறையும்” மிகவும் வேகமாக செயல்பட்டுவருவதை தினசரி செய்திகளினூடாக அறியக்கிடைக்கிறது.

இதனை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். மேலும் பொலிஸாருக்கு உறுதுணையாக குறித்த விடையத்தில் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் அதே சமயம், போதைவஸ்து பாவனையால் “கைதாகும் மாணவர்களை” சிறைப்படுத்தும் நடவடிக்கைளை போலீசார் கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பாடசாலை மாணவ மாணவிகளை கைது செய்தால், அவர்களை சிறைப்படுத்துவதை விடுத்து “சரியான மருத்துவத்தை” பெற்றுக்கொடுப்பதுடன் கவுன்சிலிங் மூலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான சீர்திருத்த பணியை முன்னெடுத்துச் செல்ல போலீசார் உறுதுணை புரிய வேண்டும்

போதைப்பொருள் பாவனை என்பதும் போதைப்பொருள் விற்பனை என்பது இரு வெவ்வேறு விடையங்கள் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளம் சந்ததியினரை காப்பதே எமது கடமை என்பதையும் நினைவில் கொண்டு போலீசார் கடமையாற்றவேண்டும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...