1524736500
செய்திகள்இலங்கை

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

Share

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளையும் மீறி அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவ ஆட்சியை நாட்டில் நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை அவசர காலச்சட்டத்தை தவிர சாதாரண நடப்புச் சட்டங்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும்.

சீனி, எரிபொருள், அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுவான சட்டங்களே போதுமானவை. இன்று அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்.

அன்டிஜென் தொடக்கம் அரிசி வரை அரசாங்கத்துடன் தொடர்பிலிருப்பவர்களே இறக்குமதி செய்கின்றனர். நேரடியாகவே அவர்களுக்கு பணிப்புரையை ஜனாதிபதியால் வழங்கமுடியும்.

எனினும் அவசரகால சட்டத்தை கொண்டுவந்து இந்த மோசடிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை காண்பிக்கவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...