309935811 6494836193877255 5662678809496964611 n
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பயணிகள் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம்!

Share

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி நாட்டிற்கு வருகை தருவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட அனுமதிப்பத்திரம் (Tourist Fuel Pass) வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள சம்பத் வங்கிக் கிளைகளில் 5 அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் கோட்டா இன்றி தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறைந்தபட்சம் 50 அமெரிக்க டொலர் மற்றும் அதிகபட்சம் 300 அமெரிக்க டொலருக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் எரிபொருளை வழங்க பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...