tamilnaadu
இந்தியாசெய்திகள்

13 KM நீந்தி தமிழகம் சென்ற இலங்கை இளைஞன்!

Share

இலங்கை கடற்படை சுட்டபோது கடலில் பாய்ந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞர் ஒருவர், 13 கிலோமீற்றர் தூரம் நீந்தி தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளார்.

24 வயதான மேற்படி இளைஞர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் அல்லது அஜய் அல்லது கான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தி ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மூலம் இவர் குறித்த தகவல்கள் கிடைத்ததையடுத்து அவரை தமிழக பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழகத்தின் தி ஹிந்து பத்திரிகையிடம் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மன்னாரை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பமொன்றினால் வாடகைக்கு பெறப்பட்ட படகு மூலம் 3 நாட்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து கான் புறப்பட்டுள்ளார்.

அவர்கள் அரிச்சல்முனைக்கு அருகில் 5 ஆவது தீவை நெருங்கியபோது, நடுக்கடலில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அதையடுத்து, கான் கடலில் குதித்தார்.

5 பேர் கொண்ட குடும்பம் வெள்ளிக்கிழiமை மண்டபம் கரையை அடைந்தது. இந்த இளைஞருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்படி இளைஞனை அவானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அவரை பொலிஸார் கரைக்கு அழைத்து வந்தனர்’ என தெரிவித்துள்ளார்.

#SriLanka #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...