மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நிறைவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல நாடுகளில் சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி பயன்படுத்துவதால் அந்தத் தடுப்பூசி பொருத்தமானது என கருதுகிறோம்.
மேலும் சிறுவர்களுக்கு எந்தத் தடுப்பூசி பொருத்தமானது என மருத்துவ வல்லுநர்களுடன் ஆராய்ந்து விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு எட்டப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment