vimal 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு IMF மருந்தாகாது!

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற நோய்க்கு சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் மருந்து தீர்வாக அமையாது. மாறாக அது நோயை தீவிரப்படுத்தும். அதன்மூலம் சமூக நெருக்கடி உச்சம் பெறும்.”

இவ்வாறு ‘உத்தர லங்கா சபாகய’ என்ற கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” சர்வதேச நாணய நிதியமானது, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையின் ஓர் அங்கமாகும். எனவே, ‘பொருளாதார நெருக்கடி’ என்ற பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் தீர்வு கிட்டாது, நோயை குணப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நோயை தக்க வைத்துக்கொள்ளவே அங்கிருந்து மருந்து வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மீண்டெழலாம் என நினைப்பது தவறு. அதன்மூலம் சமூக நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஐ.எம்.எவ்பை நாடுவதால் பொருளாதார நெருக்கடி தீர்ந்து, சமூக பாதுகாப்பு ஏற்படாது. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான் 2 ஆம் கட்ட போராட்டம் ஆரம்பமாகும் என அநுரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் அறிவித்து வருகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9
செய்திகள்இலங்கை

பெப்ரவரிக்குள் அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை!

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் புதிய அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...

uNNNNNNNNNNNNNNNNNN
உலகம்செய்திகள்

வெனிசுலா விவகாரம்: ஐநா பாதுகாப்பு சபை நாளை அவசரக் கூடல் – மதுரோ கைது மற்றும் வான்வழித் தாக்குதல்கள் குறித்து விவாதம்!

வெனிசுலா விவகாரம்: ஐநா பாதுகாப்பு சபை நாளை அவசரக் கூடல் – மதுரோ கைது மற்றும்...

MediaFile 6
அரசியல்இலங்கைசெய்திகள்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: நாகரிகமற்ற செயல் என JVP கடும் கண்டனம்!

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதைக்...

26 695a4cc21b604
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நோயாளிகளின் உயிரோடு விளையாடாதே: அக்கரைப்பற்று வைத்தியசாலை பணிப்பாளரை மாற்றக்கோரி கொட்டும் மழையில் போராட்டம்!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நோயாளர் பாதிப்புகளைக் கண்டித்து, வைத்தியசாலைப் பணிப்பாளரை...