robbery gold
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் – நகைகளும் கொள்ளை

Share

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிசாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...