புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் டலஸ் அணிக்கும், ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ ( புதிய லங்கா சுதந்திரக்கட்சி) என்ற கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் இடையில் பேச்சு நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குறித்த சந்திப்பில் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் பொதுவான கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டது என சந்திப்பின் பின்னர், குமார வெல்கம ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
தனது அரசியல் பயணத்துக்கு சந்திரிக்கா அம்மையாரின் ஆசி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment