dalasRER
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் கட்சியில் இருந்து நீக்கட்டும்! – டலஸ் சவால்

Share

” உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்.”

இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியவை வருமாறு,

” நாட்டில் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. ஆனால் இராஜாங்க அமைச்சு நியமனம் இடம்பெறுகின்றது. என்ன நடக்கின்றதென தெரியவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அநாதவராக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவே நாம் புதிய அரசியல் சக்தியை உருவாக்கியுள்ளோம். எமது முடிவில் எந்த தவறும் இல்லை.

கட்சியை விட்டு நீக்கினால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். முடிந்தால் நீக்கி காட்டுமாறு சவாலும் விடுக்கின்றோம். ஏனெனில் உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாங்கள்தான். கட்சிகளின் தனித்தும் மற்றும் கொள்கைக்காக நாமே முன்னிலையாகியுள்ளோம்.” – என்றார்.

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...