தொழில்நுட்பம்

ஐபோன் 14 சீரிசில் சிம் கார்டு ஸ்லாட் நீக்கம் செய்யப்படுகிறதா?

Share

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2022 ஐபோன்களில் முற்றிலும் புது டிசைன் வழங்கப்பட இருக்கும் நிலையில், ஆப்பிள் இதே மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஐபோன் 15 சீரிசில் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் ஐபோன் மாடல்களில் இ சிம் மற்றும் போர்ட்-லெஸ் மாடலை கொண்டு வருவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.

இந்த முறை இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்ப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

#Iphone #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...