images 2 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மனித உரிமைப் பேரவை பிரதான நாடுகளுக்கு தமிழ் தரப்பினரின் ஒருமித்த வரைபு

Share

தமிழ்த் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியது.

இக் கோரிக்கையில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாராட்டுவதை தடுக்கும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்ற உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும், இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐநா பாதுகாப்புச் சபையின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்திய பொழுது அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வில்லை என்பதும், அதே போன்று வடகொரிய நாட்டை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப் படுத்துவதற்காக ஐநா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியக் குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமை பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...