Ranjan ramanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

ரஞ்சனுக்கு நாளை விடுதலை!

Share

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுவரை, ராமநாயக்கவின் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

அலரிமாளிகைக்கு வெளியில் தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது, இழிவானது மட்டுமன்றி ஒட்டுமொத்த நீதித்துறையையும் அவமதிக்கும் வகையிலானது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது தொடர்பில் முழு நீதித்துறையிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட கருத்தை, மீளப் பெறப் போவதில்லை எனக் கூறி, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய கருத்திற்கும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அத்துடன், தனது வாழ்நாளில், ஒட்டுமொத்த நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் சத்தியக் கடதாசியில் உறுதியளித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் நாளை விடுதலை செய்யப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

வெள்ளை மாளிகை நடன மண்டபக் கட்டுமானத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தடை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் முன்னெடுத்து வரும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான...

Untitled 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதீத வெப்பம் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்: மனநல நிபுணர் டாக்டர் விந்தியா விஜயபண்டாரா விளக்கம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பமான காலநிலை, மக்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி மனநலத்தையும்...

Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...