central bank of sri lanka
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு நாணயங்கள் வைத்திருப்போருக்கு அறிவிப்பு!

Share

பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமுலிலிருக்கும்.

இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் இந்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும். அத்துடன், உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் விற்பனை செய்ய முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நிய செலாவணி திணைக்களத்தின் 011-2 477 255, 011-2 398 511 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...