298594178 444410327730844 1322395272648485032 n
இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னமெரிக்கா நாடான கொலம்பியாவில் இருந்து QR 662 என்ற விமானத்தில் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் கொக்கைன் போதைப்பொருளை தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் காகித உருளைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த போதைப்பொருளின் மொத்த பெறுமதி 245 மில்லியன் ரூபா எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கொலம்பிய நாட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...