IMG 20220812 WA0028
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.

மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.

அதனை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு உட்கொள்ளாது இருக்கின்றது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG 20220812 WA0025

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...