721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

Share

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக செயற்பட்டவேளை, கடந்த ஜுலை 17 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தினார்.

அவசரகால நிலைமைப் பிரகடனப்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் அது இரத்தாகிவிடும். எனவே, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.மாலை 5.25 மணிவரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

அதன்பின்னர் அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான பிரேரணைமீது எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்பை கோரினார். இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. டலஸ் அணியும் எதிராகவே வாக்களித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், அரச பங்காளிக்கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளடங்கலான சுயாதீன அணிகளும் ஆதரித்து வாக்களித்தன. இ.தொ.கா. எம்.பிக்கள் இருவரும் ஆதரித்து வாக்களித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...