WhatsApp Image 2022 06 30 at 6.24.59 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதுவர்- ஜனாதிபதி சந்திப்பு!

Share

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் திருமதி ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டு வருமென நம்புவதாகவும் திருமதி ஜூலி சன்ங் ,ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 1
இலங்கைசெய்திகள்

ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை: இலங்கை உட்பட 5 நாடுகளில் பேரழிவு – 1,600 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதி முழுவதும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக மோசமான...

MediaFile 3 1
இலங்கைசெய்திகள்

வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம்...

25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...