5 3 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

Share

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர்.

அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் , விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும் , ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறினார்கள். அத்தனையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் , கோப்பாய் பிரதேச செயலரும். புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளோம். ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து , இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தினார்கள்.

5 2 5 4 5 5 1 5 1 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...