மன்னார் முருங்கன் பகுதியில் 183 கிலோ 715 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருங்கன் பிரதான வீதிப் பகுதியில் உள்ள பொலிஸாரின் வீதித்தடை சோதனைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வங்காலை பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ .சுமணவீரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கேரளக் கஞ்சாவை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் நேற்றுக் காலை 2 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.ஸ்.லயனல்,பொ.ப.குமார,உ.பொ.ப.உப்பாலி செனவிரத்ன,உ.பொ.ப.திசானாயக தலைமையிலான அணியினரே கடத்தி செல்லப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் அதனைக் கொண்டுசென்ற கூலர் வான் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 சந்தேக நபர்களையும் கைதுசெய்து உள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் கண்டி மற்றும் திருகோணமலை பகுதியை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் ஆகியவை மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment