sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

என்னிடம் மட்டுமே தீர்வு உண்டு! – நாட்டை ஒப்படைத்து விட்டு வெளியேறுங்கள் என்கிறார் சஜித்

Share

நாட்டை சரி செய்வதற்கான தீர்வு என்னிடமே உள்ளது. எனவே நாட்டை என்னிடம் தந்துவிட்டு கோட்டாபய – ரணில் தலைமையிலான அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும். — இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடமே உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வும் என்னிடமே உள்ளது.

நாட்டில் சர்வகட்சி அரசாங்கமொன்று நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். மக்கள் ஆணையை பெறும் வரையில் இந்த அரசாங்கம் தொடரவேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. நாட்டு மக்களுக்கு அவர்களால் நிவாரணம் வழங்கவும் முடியாது. போராட்டம் உருவாக முக்கிய காரணம் பொருளாதார பிரச்சினையே.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது, அவர்கள் வெளியேறும் போது நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும்.

மக்களின் அழுத்தத்தை அரசாங்கம் மோசடிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான், அது தனி நபர்களுக்கு வேறுபடாது.

பொது உடன்பாட்டுக்கான பாலமாக நாம் செயற்படாது தயார். இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...