தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை!
தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாத் தடுப்பூசி ஏற்றிய பின்னரும் தொற்று பரவினால், அடுத்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதா அடுத்த முன்னுரிமை என ஆராய்ந்து கருத்துக்கள் முன்வைக்குமாறும் ஜனாதிபதி சுகாதாரத்துறை பிரதானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment