யாழ்ப்பாணம்– கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் இராணுவ அதிரடிப்படையினர் இணைந்து இச் சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி வீதிகளில் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திடீர் விசேட சுற்றிவளைப்பு சோதனை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பில் கைதான, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஊரங்கை மீறி பயணித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Leave a comment